Tuesday, 27 December 2011

 NFPE                NFPE             NFPE                 N F P E       NFPE            NFPE                     NFPE

                                                              
                                                                      Z I N D A B A D                 



                அஞ்சல் துறையில் உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு

                                                                   துவக்கவிழா

                                  தென்காசி கிளை : கோவில்பட்டி கோட்டம்

தோழர்களே!

                   அனைத்து துறைகளிலும் அதிகமான பெண்கள் பணிக்கு வந்த

சூழ்நிலையில், பெண்களுக்கான பிரச்சனைகளை எடுத்து செல்வதற்கும்,

பெண்கள் தொழிற்சங்க விசயங்களை விவாதிப்பதற்குமான தேவை

ஏற்பட்டுள்ளது.

                   ஆகவே நமது NFPE சம்மேளனம் தனியாக பெண்கள் குழுவை

அமைத்துள்ளது. இந்த சூழ்நிலையில் கோவில்பட்டி கோட்டம், தென்காசி

கிளையில்,  NFPE P3, P4, மற்றும் AIPEDEU சங்கங்கள், இணைந்து பெண்

ஊழியர்களுக்காக, 18-12-2011 அன்று,

 "உழைக்கும்பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு" அமைப்பை

துவக்கி உள்ளனர்.

                                    தென்காசி தோழர்களுக்கு, கோவில்பட்டி கோட்டசங்கத்தின்

சார்பாக புரட்சிகரமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

                                     இவ்விழாவிற்கு S.சக்தி PA கடையநல்லூர், அவர்கள்

தலைமை தாங்கினார். C.சசிரேகா, அவர்கள் ( கன்வீனர்  உழைக்கும்பெண்கள் 

ஒருங்கிணைப்புக்குழு கோவில்பட்டி கோட்டம் ) வாழ்த்துரை வழங்கினார்.

மற்றும் M.விவேகாவித்யர்த்னி உதவிசெயலர், உழைக்கும் பெண்கள்

ஒருங்கிணைப்புக்குழு, R.சிவகுமார் NFPE-P3, L.கேசவன் NFPE-P4,

S.பாலசுப்ரமணியன் AIPEDEU, கோவில்பட்டி கோட்டம், ஆகியோர்

வாழ்த்தி பேசினர். 

                தென்காசி கிளையின் சார்பில், தோழர்கள், G.சுப்பையா செயலர்,NFPE-P3

S.சிவசங்கரன் NFPE-P4,  N.குலசேகரன் AIPEDEU, ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

                இறுதியாக, தோழர் S.ஆனந்தகோமதி ( உதவிசெயலர் NFPE-P3 அம்பை )

அவர்களும்,  தோழர் R.சங்கராவுடையம்மால்,  ( MUTA ) பராசக்தி மகளிர்

கல்லூரி குற்றாலம், அவர்களும் சிறப்புரையாற்றினார்கள். 

புதிய நிர்வாகிகளாக,

               தலைவர் : S.மாலதி  PA தென்காசி HO,

                 செயலர் : P.சண்முகலக்ஷ்மி  PA தென்காசி HO.

       பொருளாளர் : V.செல்வகுமாரி  DSM  தென்காசி  HO.

                                                                   ஆகிய தோழர்களும், மற்றும் 12 நிர்வாகிகளும்

ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகளுக்கு கோவில்பட்டி 

கோட்ட சங்கத்தின் சார்பாகவும், மாநில சங்கத்தின் சார்பாகவும், வீரம் செறிந்த

புரட்சிகரமான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.    


                    N F P E - P3, P4 & GDS   

                           KOVILPATTI



No comments:

Post a Comment