Thursday, 1 May 2014

 
திருநெல்வேலி அஞ்சலகத்தில் NFPE சார்பாக  மே தின கூட்டம் 01.05.2014 அன்று மாலை 6மணியிலிருந்து நடைபெற்றது. அஞ்சல் மூன்றின் கோட்டதலைவர் தோழர் ஆதிமூலம் அவர்கள் தலைமை தாங்கினார்கள். அஞ்சல் மூன்றின் கோட்ட செயலாளரும், மாநில உதவிசெயலாளருமான தோழர் SK.ஜேக்கப்ராஜ் அவர்கள் 7th Pay commission சம்பந்தமாகவும், ஸ்தல மட்ட பிரச்சனைகள் சம்பந்தமாகவும் உரையாற்றினார். தோழர் பாட்சா அஞ்சல் நான்கின் கோட்ட 
செயலாளர் அவர்கள் கூட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மிக சிறப்பாக செய்திருந்தார்.
அஞ்சல் நான்கின் மாநில தலைவர் தோழர் G.கண்ணன் அவர்கள் மே தினம் சம்பந்தமாகவும்,
புதிய பென்சன் திட்டத்தின் மோசமான விளைவுகள் சம்பந்தமாகவும் உரையாற்றினார்.
மே தின சபதத்துடன் கூட்டம் இனிதே நிறைவு பெற்றத.
மீண்டும் அனைவருக்கும் மே தின வாழ்த்துக்கள்.
 

                              
                                                          மே தின வாழ்த்துக்கள்.
 
கோவில்பட்டி அஞ்சல் ஊழியர்கள் (NFPE) சார்பாக 01.05.2014 இன்று காலையில் அஞ்சல் அலுவலகத்தில் கொடியேற்றினார்கள்.
தோழர் S.வீரணன், அகில இந்திய அஞ்சல் & RMS ஓய்வூதியர் சங்கத்தின் மாநில உதவி பொதுசெயலாளர் அவர்கள் மே தின கொடியேற்றி உரையாற்றினார்
 
உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் இழப்பதற்கு எதுவும் இல்லை அடிமை விலங்கைத் தவிர அடைவதற்கோர் பொன்னுலகம் இருக்கிறது உலகத் தொழிலாள்ர்களே ஒன்று சேருங்கள்.