Friday, 25 October 2013

                             
                                                                     NFPE-P4
                                        அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம்  
                                          தபால்காரர் மற்றும் நான்காம் பிரிவு 
                                                 தமிழ் மாநிலம் , சென்னை . 

                                தமிழ் மாநில செயற்குழு கூட்டம்  


தோழர்களே !

                AIPEU-P4 சங்கத்தினுடைய தமிழ் மாநில செயற்குழு கூட்டம் 24.10.2013 
முதல் 26.10.2013 வரை மதுரை பால் மீனாஸ் மண்டபத்தில் நடைபெற்றது . 
முதல் நிகழ்ச்சியாக  அகில இந்திய பொதுச்செயலாளர் 
தோழர் ஈஸ்வர் சிங் தபாஸ் அவர்கள் சம்மேளன கொடியை வீரம் செரிந்த கோஷங்களோடு ஏற்றினார். 

                மாநில செயற்குழுவிற்கு , மாநில தலைவர் தோழர் G.கண்ணன் அவர்கள் தலைமை தாங்கினார். தோழர் K.பத்மநாபன் மாநில இணை செயலாளர் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். மாநில செயலாளர் தோழர் 
V.ராஜேந்திரன் அவர்கள் துவக்கவுரை ஆற்றினார்.  

               19 பொருள்கள் விவாதிக்கப்பட்டது. தபால்காரர் மற்றும் நான்காம் பிரிவு ஊழியர் பிரச்சனைகளை நிறைவேற்ற எதிர் காலத்தில் போராட்டங்கள் 
நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டது. 

               தோழர் V.ராஜேந்திரன் அவர்கள் இந்த மாதம் பணி ஒய்வு பெறப்போவதால் மாநில செயலர் பதவிக்கான இடத்தையும் ஏற்கனவே 
காலியாகவுள்ள  மாநில அமைப்பு செயலருக்கான இடத்தையும் நிரப்புவது 
சம்பந்தமான விசயத்தில் , மாநில செயலர் பதவிக்கு மும்முனை போட்டி வந்தது. 

            மாநில தலைவர் தோழர் G.கண்ணன் அவர்கள் அகிலஇந்திய 
செயலாளர் தோழர் I.S தபாஸ் அவர்களின் உதவியோடு தேர்தலை நடத்தினார். 
மொத்தம் 62 வாக்குகளில் தோழர் கோபு கோவிந்தராஜ் தபால்காரர் சென்னை அவர்கள் முதன்மையாக  28 வாக்குகளும் மற்ற இரண்டு தோழர்களும் தலா 25 மற்றும் 9 வாக்குகளும் பெற்றதால், 

தோழர் கோபு கோவிந்தராஜன் அவர்கள் மாநில செயலாளராக பதவி ஏற்றார். 

தோழர் கோபு கோவிந்தராஜன் அவர்கள் பணி  சிறக்க புரட்சிகர வாழ்த்துக்கள். 

மாநில அமைப்பு செயலராக தோழர் S.கோவிந்தராஜன் கோட்டசெயலாளர்           P4 திருச்சி அவர்கள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார். 

தோழர் S.கோவிந்தராஜன் அவர்கள் பணி சிறக்க வீர வாழ்த்துக்கள். 

செயற்குழுவில் கலந்து கொண்டு சிறப்பித்த தோழர்கள், 
               தோழர் S.ரகுபதி செயலாளர் NFPE 
               தோழர் N.கோபாலகிருஷ்ணன் அகிலஇந்திய செயல்தலைவர் AIPEU-P3 
               தோழர் J.ராமமூர்த்தி மாநில செயலாளர் AIPEU-P3 
               தோழர் வீரமணி அகிலஇந்திய உதவி செயலாளர் AIPEU-P3 
               தோழர் S.கருணாநிதி JCM உறுப்பினர் (NFPE) 
               தோழர் D.சிவகுருநாதன் உழைக்கும் வர்க்கம் உதவி ஆசிரியர் ,                ஆகியோருக்கு நமது வாழ்த்துக்கள். 

இறுதியாக தோழர் வெங்கட்டரமணி மாநில பொருளாளர் அவர்கள் நன்றி 
கூறினார். 
                                            செயற்குழுவில் சில காட்சிகள் ..... 

                                           சூரிய  ஒளியில்  .... செங்கதிர்கள்  


ஆகா, மனதை நெகிழ செய்யும் காட்சி ....
                                                                           பொறுப்பை கொடுப்பவரும் பெறுபவரும்,

அண்ணன் ராஜேந்திரன் , தோழர் கோபு ....

                                               
                                                   தோழர் ஈஸ்வர் சிங் தபாஸ்


                                         தோழர் G.கண்ணன் மாநில தலைவர்

                     
                                     தோழர் V.ராஜேந்திரன் மாநிலசெயலாளர்


                                           தோழர் S.ரகுபதி சம்மேளன செயலர் NFPE


                            தோழர் N G செயல் தலைவர் மத்தியசங்கம் P3 AIPEU










No comments:

Post a Comment