Tuesday, 3 September 2013

                                                              NFPE - KOVILPATTI - DN 

                                                              போராட்டம் வெற்றி 

தோழர்களே!

                      கோவில்பட்டி கோட்டத்தில் 27 கோரிக்கைகளை முன் வைத்து

நடைபெற்ற ஸ்தல மட்ட போராட்டம் தள்ளி வைக்கப்பட்டது.

3.9.13 மற்றும் 4.9.13 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற இருந்த உண்ணாவிரத

போராட்டம், பேச்சுவார்த்தையின் அடிப்படையில் 3.9.13 மதியம்

முதல் தள்ளிவைக்கப்பட்டது.

                     3.9.13 காலை சரியாக 10 மணிக்கு தோழர்கள் H.சுவாமிநாதன் P3,

G.கண்ணன் P4, S.மணி GDS-NFPE, ஆகியோர் தலைமையில்

உண்ணாவிரத போராட்டம் துவக்கப்பட்டது.

                    நமது போராட்டத்திற்கு வருகை தந்த மாநில சங்க நிர்வாகிகள்.

தோழர் ஸ்ரீவெங்கடேஷ் மாநிலத்தலைவர் அஞ்சல் மூன்று ,

தோழர் J.ராமமூர்த்தி மாநில செயலாளர் அஞ்சல் மூன்று ,

தோழர் தன்ராஜ் மாநில செயலாளர் GDS-NFPE

தோழர் தியாகராஜபாண்டியன் தென்மண்டல செயலாளர் அஞ்சல் மூன்று,

அனைவருக்கும் கோவில்பட்டி கோட்ட சங்கங்களின் சார்பாக

வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

காலை 11.30 மணி அளவில் SSP அவர்கள் பேச்சுவார்த்தைக்கு அழைத்ததின்

பேரில்  மாநிலசங்க, கோட்ட, கிளை சங்க நிர்வாகிகள் அனைவரும்

சென்றோம். நமது அனைத்து  கோரிக்கைகளையும் நிறைவேற்றி

தருவதாக திரு SSP அவர்கள்  உறுதியளித்ததின் அடிப்படையில்

உண்ணாவிரத போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

போராட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து தோழர்களுக்கும்

புரட்சிகரமான வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

                                                                                                             NFPE  P3, P4 & GDS
                                                                                              கோட்ட, கிளைசங்க நிர்வாகிகள்
                                                                                                         கோவில்பட்டி கோட்டம்

போராட்ட விழாவில் சில காட்சிகள் .... 

































No comments:

Post a Comment